கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கன்னட சினிமாவை இந்திய அளவில் உயர்த்திப் பிடித்த படம் கே ஜி எஃப். இது கோலார் தங்க வயலில் பணி புரியும் தொழிலாளர்களை பற்றியும் அங்கே நடக்கும் அரசியல் பற்றியும் இரண்டு பாகங்களிலும் விரிவாக பேசியிருந்தது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா என்கிற படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இதுவும் கேஜி எப் பாணியில் அதேசமயம் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பற்றி பேசம் படம் என்பது புரிகிறது.

உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையிலான உணர்வுகளைப் பேசும் படம் மொழிகளைக் கடந்து ஜெயிக்கிறது. உணர்வுகளை ஆழமாகப் பேசும் மண் சார்ந்த திரைப்படமானது எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்போது அது அனைத்திந்தியர்களுக்கான படமாக மாறிவிடுகிறது.

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வரும் “தசரா” அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது நடிகர்களின் முழுமையான மாற்றம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை, அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களைக் காட்டுவது என, தசரா டீஸர் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது

இந்தப் படம் நடிகர் நானியின் படமட்டுமல்ல, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவின் கனவுப்படைப்பு. இருவருமாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான படைப்பை நமக்குத் தந்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் ஒதெலாவின் உருவாக்கம் ஒரு அறிமுக இயக்குநரைப் போல் இல்லை. காட்சி மற்றும் கதை சொல்லும் பாணி கதாநாயகன் மற்றும் எதிரிகள் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தலாக முன்னெப்போதும் பார்த்திராத அனுபவத்தைத் தருகிறது

ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் தசரா படத்தின் டீசரை, இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர்.