Home News Kollywood ஒரே நாளில் வெளியாகும் செல்வராகவன் – தனுஷ் படங்கள்

ஒரே நாளில் வெளியாகும் செல்வராகவன் – தனுஷ் படங்கள்

ஒரு சில படங்கள் வெற்றியோ தோல்வியோ ஆனால் அது எடுத்துக்கொண்ட கதையை பொருத்தவரை பொதுமக்களிடம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு படம் தான் திரவுபதி. அந்த படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் அதிரடி காட்டி இருந்தார். தற்போது இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்து வரும் பகாசுரன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி17 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அதே தேதியில் செல்வராகவனின் சகோதரர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது