V4UMEDIA
HomeNewsKollywoodசீனியர் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் மறைவு ; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சீனியர் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் மறைவு ; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமாவில் 70 80 காலகட்டங்களில் மிக பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதற்கு பெயர் பெற்றவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இவர் அதிக அளவில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

கிட்டத்தட்ட இந்தி உட்பட 1500 படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள இவர் நேற்று காலமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், மனோபாலா உள்ளிட்ட பலர் இவரது மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஜூடோ ரத்தினம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறும்போது, “1976 இல் இருந்து நான் அவருடன் பழகி வந்திருக்கிறேன். எஸ்பி முத்துராமன் சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்திற்கும் அவர்தான் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

தனக்கென ஒரு தனி ஸ்டைலில் சண்டைக்காட்சிகளை அவர் வடிவமைப்பார். முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டை காட்சியை இப்போதும் மறக்க முடியாது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்லாமல், சக சண்டை கலைஞர்களின் பாதுகாப்பையும் அவர் ரொம்பவே கவனமாக பார்த்துக் கொள்வார்.

93 வயது வரை பூரண வாழ்க்கை வாழ்ந்து அமரராகி இருக்கும் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்” என்று தனது இரங்கலை தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதேபோல நடிகர் தனுஷும் தான் நடித்துவரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் ஜூடோ ரத்தினத்தின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்

Most Popular

Recent Comments