V4UMEDIA
HomeNewsKollywoodகுடியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகைச்சுவை படம் குடிமகான்

குடியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகைச்சுவை படம் குடிமகான்

கலைஞர் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நாளைய இயக்குனர் சீசன் 6 நிகழ்ச்சியில் ரன்னர் அப் டைட்டில் வென்றவர் இயக்குனர் என் பிரகாஷ். அவர் இயக்கிய குட்டி தாதா என்கிற படத்திற்கு விருது கிடைத்தது. இந்த நிலையில் வெள்ளித்திரையில் முதன்முறையாக குடிமகான் என்கிற படம் மூலமாக இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார் பிரகாஷ்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இதுவரை தனித்தனி நபர்களாகத்தான் சினிமாவில் நுழைந்து தங்களை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் முதன்முறையாக நாளைய இயக்குனர் சீசன் 6 ரன்னர் அப்பின் மொத்த டீமும் இந்த குடிமகான் படத்தில் இணைந்து ஒன்றாக வெள்ளி திரையில் நுழைந்துள்ளனர் என்பதுதான் இதில் ஹைலைட்டே.

விஜய் சிவன் அறிமுகக் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளை இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்

இந்தப்படம் பற்றி இயக்குனர் பிரகாஷ்.N கூறும்போது, “வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பபாங்கான படமாக இந்த ‘குடிமகான்’ உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதை தப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள்.. குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், ‘குடிமகானாக’ இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது” என்கிறார்

Most Popular

Recent Comments