HomeNewsKollywoodபொம்மை நாயகி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொம்மை நாயகி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஒரு பக்கம் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கலகலப்பூட்டி வரும் யோகிபாபு இன்னொரு பக்கம் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அதிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

குறிப்பாக அவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. கடந்த வருடம் வெளியான மிகப்பெரிய வெற்றி பெற்ற லவ் டுடே படத்தில் கூட அவர் குணச்சித்திர நடிப்பால்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

இந்த நிலையில் அவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பொம்மைய நாயகி என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஷான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தந்தை மகள் பாசம் பற்றிய கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் யோகி பாபு உடன் சுபத்ரா, ஹரி, ஜி என் குமார்,  அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி,  நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். இந்த நிலையில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின்  உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி.

யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும்  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments