V4UMEDIA
HomeNewsKollywoodவிருத்தாச்சலம் முனீஸ்வரன் கோவிலில் மாவீரா படப்பிடிப்பை துவங்கிய கௌதமன்

விருத்தாச்சலம் முனீஸ்வரன் கோவிலில் மாவீரா படப்பிடிப்பை துவங்கிய கௌதமன்

தமிழ் சினிமாவில் கனவே கலையாதே, மகிழ்ச்சி என ஒரு சில படங்களை இயக்கி இருந்தாலும் சின்னத்திரையில் ஒளிபரப்பான சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவான சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் கௌதமன். தற்போது அவர் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு மாவீரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், அஸ்வினி சந்திரசேகர், இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, “பாகுபலி” பிரபாகர், தமிழ் கௌதமன், தீனா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். “கவிப்பேரரசு” வைரமுத்து உணர்வுமிக்க பாடல்களை எழுதுகிறார் சமீபத்தில் மாவீரா திரைப்படத்தின் திரைப்பட தொடக்க விழா கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள விஜயமாநகரம் முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்றது.

தமிழர்களின் வழிபாட்டோடும், வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப்பிணைந்த தமிழ்க்கடவுள் முருகன், வள்ளலார், வள்ளுவர் ஆகியோர் படங்களுக்கு வழிபாடு செய்து படப்பிடிப்பு தொடங்கியது. இப்படம் தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப்படைப்பாக இருக்கும். என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவது மட்டும் தான். சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். இது முந்திரிக்காட்டில் வாழ்ந்த மாவீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறாகும். என்கிறார் இயக்குனர் கௌதமன்

Most Popular

Recent Comments