நடிகர், இசையமைப்பாளர், தற்போது இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞர் விஜய் ஆண்டனி. சில வருடங்களுக்கு முன்பு தான் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் என்கிற படத்தின் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன்-2 வை அவரை நடித்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மலேசியாவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பில் ஒரு படகு சண்டை காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டு உடனடியாக அங்கே மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் மிகவும் சீரியசான நிலையில் இருக்கிறார் என்பது போன்று சில மீடியாக்களிலும் சோசியல் மீடியாக்களிலும் செய்தி ஒன்று வேகமாக பரவியது. ஆனால் அவர் விபத்தில் அடிபட்டது உண்மைதான், ஆனால் நன்கு தேதி வருகிறார் ஆபத்து கட்டம் எதுவும் இல்லை என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அப்போது ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தனது கைப்பட எழுதிய வெளியிட்ட செய்தி ஒன்றில் கூறும்போது, “பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே மலேசியாவில் இருந்து சென்னை திரும்பி அவரது வீட்டுக்கு வந்து விட்டார். இரண்டு வாரங்களுக்கு அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். அதனால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

கூடிய சீக்கிரமே ரசிகர்களிடம் வீடியோ மூலமாக அவர் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் விஜய் ஆண்டனி பற்றி தவறான வதந்திகளை நம்பவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
விஜய் ஆண்டனியை வைத்து இயக்குனர் சுசீந்திரன் வள்ளிமயில் என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தகது.