V4UMEDIA
HomeNewsKollywoodஒன்றாக சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய சுந்தர் சி - சந்தானம்

ஒன்றாக சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய சுந்தர் சி – சந்தானம்

தமிழ் திரை உலகில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படங்களை எடுப்பதில் நம்பர் ஒன் என பெயர் பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அதே போல கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் சந்தானம்.

இவர்கள் இருவருக்கும் இன்று (ஜனவரி 21) ஒரேநாளில் பிறந்த நாள் என்பது ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் இந்த இருவரும் சேர்ந்து ஒன்றாக தங்களது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்து இதில் முன் நின்று வாழ்த்தியவர் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவருடன் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு. M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், தயாரிப்பாளர் Romeo Pictures திரு. ராகுல், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு S. அம்பேத் குமார், தயாரிப்பாளர் திரு. K. விஜய் பாண்டி,நடிகர் விச்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Most Popular

Recent Comments