Home News Kollywood ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா

ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அதேபோன்று நடிகை தமன்னாவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் தமன்னா. அப்போதே இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்றும் ஒரு செய்தி பரவி வந்தது.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் பயணித்து வரும் தமன்னா இன்னும் ஒருமுறை கூட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்ததில்லை. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் மூலமாக தமன்னாவின் நீண்ட நாள் ஆசையும் ரசிகர்களின் ஆசையும் ஒரு சேர நிறைவேறி உள்ளது.

ஆம். ஜெயிலர் படத்தில் தமன்னா மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ஏற்கனவே கன்னட திரை உலகை சேர்ந்த சிவராஜ்குமார், அதற்கடுத்ததாக மலையாள திரையுலகை சேர்ந்த மோகன்லால், சமீபத்தில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த நடிகர் சுனில் என ஒவ்வொரு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இணைந்துள்ளனர். தற்போது தமன்னாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது இந்த படம் ஒரு பக்காவான பேங்க் இந்தியா படம் என்பதை இப்போது நிரூபித்து விட்டது.