பனையேறிகளின் வாழ்வை மையமாக வைத்து முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெடுமி. இந்த படத்தை இயக்குனர் நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ் மற்றும் கதாநாயகியாக அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள் ராஜசிம்மன், ஏ.ஆர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி. கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள்.

ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்” என்று பேசினார்

படத்தின் தயாரிப்பாளர் வேல்முருகன் பேசும்போது,தயாரிப்பாளர் வேல்முருகன் பேசும்போது, “இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். முதல் படம் வெற்றிப் படம் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது ஒரு சவாலான படம். இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அது தான் பெரிய ரிஸ்க். இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் பேசுகிறது . இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.