V4UMEDIA
HomeNewsKollywoodமூன்றாவது முறை இணையும் ராட்சசன் கூட்டணி

மூன்றாவது முறை இணையும் ராட்சசன் கூட்டணி

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு மிக முக்கியமான வெற்றிகளை தந்து அவரை ஒரு கமர்சியல் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய இரண்டு படங்கள். இந்த இரண்டு படங்களையும் ராம்குமார் இயக்கி இருந்தார். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கியவர் தான் ராட்சசன் படத்தை இயக்கினாரா என கேட்கும் அளவிற்கு இரண்டு படங்களுக்கும் வித்தியாசமான கதை, கதைக்களங்கள் என ஆச்சரியப்படுத்தி இருந்தார் ராம்குமார்.

ராட்சசன் படம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்யும் அளவிற்கு இங்கே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த இருவர் கூட்டணி மூன்றாவதாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார். தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன் மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மிகவும் மதிப்புமிக்க நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார்.

இந்த நிலையில் இவர் மீண்டும் ராம்குமார் உடன் இணைந்துள்ள இந்த படத்திற்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Most Popular

Recent Comments