HomeNewsKollywoodசர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ராம் சரண் ஆடை அலங்காரம்

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ராம் சரண் ஆடை அலங்காரம்

தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம்சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்பதற்கு ஏற்ப இவரும் அதிரடியான கமர்சியல் ஹீரோவாக வலம் வருகிறார். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வெளியான மகதீரா படத்தின் மூலம் ஒரு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை பெற்ற அவர், மீண்டும் கடந்த வருடம் அதே ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டுள்ளார்.

இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதை இந்திய திரையுலகமே கொண்டாடியது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம்சரண் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு பலர் சமூக ஊடகங்களில் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments