ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வெப் தொடர் ஹாஸ்டல் டேஸ் இதன் தமிழ் பதிப்பு தற்போது எங்கு ஹாஸ்டல் என்கிற பெயரில் உருவாகி வரும் ஜனவரி 27 முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கிறது.

நகைச்சுவை ட்ராமாவாக உருவாகி இருக்கும் இந்த இணையத்தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோர் இந்த ஹாஸ்டலின் புது பேட்ச் பொறியாளர்களாக நடித்துள்ளனர்.

கல்லூரி நாட்களின் குறிப்பாக ஹாஸ்டல் நாட்களின் நினைவுகள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாக அமைந்திருக்கும். ’எங்க ஹாஸ்டல்’ அதுபோன்ற ஒரு மகிழ்ச்சிகரமான பொறியாளர்களையுடைய ஹாஸ்டல் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

சமீபத்தில் ‘எங்க ஹாஸ்டல்’ இணையத்தொடரின் ட்ரைய்லர் வெளியானது. பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆர்வத்தையும் இந்த ட்ரைய்லர் ஏற்படுத்தி இருக்கிறது

சதீஷ் சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் ஜனவரி 27,2023-ல் இருந்து ப்ரைமில் ப்ரீமியர் ஆக இருக்கிறது.