தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் நகைச்சுவை நடிகர்கள் எல்லோருமே இன்னொரு பக்கம் கதாநாயகர்களாகவும் நடிக்க துவங்கி விட்டனர். சந்தானம் முழு நேர ஹீரோவாகவே மாறிவிட்டார். சூரி, யோகி பாபு, சமீப காலமாக நடிகர் சதீஷ் ஆகியோர் ஒரு பக்கம் நகைச்சுவை நடிகராகவும் இன்னொரு பக்கம் கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே நாய் சேகர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சதீஷ். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சிஷ்யர் வெங்கி என்பவர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சதீஷ்.
இந்த படத்தை ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் தயாரிக்கின்றது, சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது.இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா என்பவர் நடிக்கிறார்
அருள்நிதி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற தேஜாவு என்கிற படத்தை தயாரித்த நிறுவனம் இது. . முக்கிய வேடங்களில் ஆனந்த்ராஜ், ஜான்விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.