V4UMEDIA
HomeNewsKollywoodயாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ‘சைத்ரா’

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ‘சைத்ரா’

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. தொடர்ந்து தற்போது எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட சிலரின் படங்களில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

இடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிர்பிழைத்து மறுஜென்மம் எடுத்து வந்துள்ள யாஷிகா ஆனந்த். முன்னைப்போலவே சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சைத்ரா என்கிற ஹாரர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் யாஷிகா ஆனந்த் அந்த படத்தில் பேய் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டுகிறார்.

இவருடன் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படமாக உருவாகி வரும் இந்த சைத்ரா படத்தை எம் ஜெனித் குமார் என்பவர் இயற்றியுள்ளார்

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

Most Popular

Recent Comments