V4UMEDIA
HomeNewsKollywoodஹிந்தி வெப் சீரிஸில் அதிரடிப்படை அதிகாரியாக விஜய்சேதுபதி

ஹிந்தி வெப் சீரிஸில் அதிரடிப்படை அதிகாரியாக விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியை பொருத்தவரை தனது நடிப்பாலும் வித்தியாசமான கதை தேர்வாலும் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து விட்டார். அந்த வகையில் தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர் பிரபல இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் பார்சி என்கிற இந்தி வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இதில் சாகித் கபூர் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா, கே.கே. மேனன், புவன் அரோரா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அமோல் பலேகர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அமேசான் பிரைம் ஒரிஜினலில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த முன்னோட்ட வெள்யீட்டு விழாவில் விஜய்சேதுபதி, சாகித் கபூர் உள்ளிட்ட படத்தில் நடித்த பங்கேற்ற அத்தனை பேரும் கலந்து கொண்டனர்.

படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஒரு கச்சிதமான மோசடியை செயல்படுத்தி அதில் பயணிக்கும் சன்னி, திடீரென தான் ஒரு இருண்ட பகுதிக்குள் நுழைகிறோம் என்பதை உணர்கிறான். அதிகம் அறியப்படாத ஒரு ‘காமன் மேன்’ உடைய வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இதன் முன்னோட்டம் காட்சிப்படுத்துகிறது.

இருப்பினும் அவனால் தேசத்துக்கு விளையக்கூடிய ஆபத்துக்களை களைந்தே தீருவது என்ற குறிக்கோளுடன், வழக்கத்துக்கு மாறாக செயல்படும் அனல் தெறிக்கும் மிடுக்கான ஒரு அதிரடிப்படை அதிகாரியாக (மக்கள் செல்வன் விஜய் சேதுபதி) வலம் வருகிறார்.

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே‌ வின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ‘ஃபார்ஸி’ எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடராக உருவாகி இருக்கிறது. அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான அதிரடிக்காட்சிகளுடன், செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும், ஒரு தெருக் கலைஞனை சுற்றி கதைப் பின்னப்பட்டிருக்கிறது.

Most Popular

Recent Comments