இளம் ஹீரோவான சாந்தனு பாக்கியராஜ் தனக்கு எப்படியாவது ஒரு பிரேக் கொடுக்கும் விதமாக ஒரு படம் அமைந்து விடாதா என தொடர்ந்து ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார். தான் நடிக்கும் படங்களில் கூட தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராவண கோட்டம் என்கிற படத்தில் நடித்துள்ளார் சாந்தனு. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது பிரபலமாக இருக்கும் நடிகர் கதிரை மதயானை கூட்டம் என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய விக்ரம் சுகுமாரன் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ளன.


இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த படத்தில் டிரைலர் அஜித் விஜய் இருவரின் துணிவு, வாரிசு படங்கள் வெளியான கிட்டத்தட்ட 250 தியேட்டர்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டது. இந்த ட்ரெய்லருக்கு விஜய் அஜித் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, இளவரசு, PL தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.