பரியேறும் பெருமாள், கர்ணன் என தனது அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதை தொடர்ந்து உதயநிதி, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என மெகா கூட்டணியுடன் மாமன்னன் என்கிற படத்தை இயக்கி வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அடுத்து மிகப்பெரிய நடிகர் என யாரையும் தேடி செல்லாமல் தனது சொந்த தயாரிப்பில் வாழை என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் கலை, நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 50 நாட்களுக்குள்ளாகவே தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் மாரி செல்வராஜ்.
இதைத்தொடர்ந்து படக்குழுவினருடன் வாழை இலை வடிவில் உள்ள கேக்கை வெட்டி இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார் மாரி செல்வராஜ்.