V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷ் படத்தை இயக்குவதை உறுதி செய்த ஹெச் வினோத்

தனுஷ் படத்தை இயக்குவதை உறுதி செய்த ஹெச் வினோத்

சதுரங்க வேட்டை என்கிற தனது முதல் படம் மூலமாகவே வரவேற்கத்தக்க இயக்குனராக அறிமுகமானவர் ஹெச். வினோத் அதைத்தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்ற இயக்குனர் வினோத் தொடர்ந்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவரை வைத்து நேர்கொண்ட பார்வை வலிமை படங்களை இயக்கியவர் மூன்றாவதாக தற்போது துணிவு என்கிற படத்தையும் இயக்குகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகை ரிலீஸ் ஆக ஜனவரி 11ஆம் தேதி வழியாக இருக்கிறது.

ஏற்கனவே அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியது போல ஹெச் வினோத்தும் அடுத்ததாக அஜித் படத்தை தான் இயக்க இருக்கிறாரா என்ற ஒரு பேச்சும் திரை உலகில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்ட வெர்ஷனாக இன்னொரு படம் எடுக்க தீர்மானித்து அந்த கதையை அஜித்திடமும் அப்போது கூறி இருந்தார் வினோத். 

ஆனால் சில சூழல்களால் வலிமை, துணிவு என வேறு ட்ராக் மாறிவிட்டார். இந்த நிலையில் அப்போது கூறிய இந்த கதையைத்தான் தற்போது தனுஷை வைத்து இயக்க இருப்பதாக கூறியுள்ளார் வினோத். தனுஷ் படத்தை வினோத் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது உற்சாகத்தில் இருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்

Most Popular

Recent Comments