இனிவரும் காலங்களில் புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் கதை அம்சம் கொண்டதாக அல்லது நகைச்சுவைக்கோ ஹாரருக்கோ முக்கியத்துவம் கொடுத்து உருவானால் ரசிகர்களை கவர்ந்து விடும் என்பதே பெரும்பாலான படைப்பாளிகளின் எண்ணமாக இருக்கிறது. அந்தவகையில் முழுக்க முழுக்க நகைச்சுவைடை மையப்படுத்தி தில் திலீப் என்கிற படம் உருவாகி வருகிறது.

குபீர் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருடன் நடிகர் ராதாரவியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்பட படைப்பாளியாக வேண்டும் என்கிற தனது கனவைத் துரத்தும் ஒரு எளிய மனிதனின் உண்மை கதை தான் இந்த படம். அதை நகைச்சுவை கலந்து கூறியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் திலீப்குமார்.

இந்த படத்தில் ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசைவேந்தன் என இரண்டு பேர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
அனைத்து பணிகளும் முடிந்து படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது