துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின.

இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து ஏற்கனவே பார்த்திபன், விஜய்சேதுபதி, குஷ்பு, மீனா, சமீபத்தில் இயக்குனர்விஜய் உள்ளிட்ட பலர் இந்த கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

அந்த வகையில் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு இந்த கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவித்துள்ளது..

இதுவரை வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வந்த நிலையில் சின்னத்திரை தொகுப்பாளர்களில் இதை பெரும் முதல் நபர் டிடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.