பாபி சிம்ஹா நடிப்பில் படங்கள் வெளியாகி ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் தற்போது தயாராகி வருகின்றன. அந்த வகையில் தடை உடை, வசந்தமுல்லை மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் வால்டர் வீரய்யா வரும் சங்கராந்தி பண்டிகையாக ரிலீஸாக வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்துள்ள வசந்தமுல்லை திரைப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ரமண புருஷோத்தமா என்பவர் இயக்கியுள்ளார் இதில் கதாநாயகியாக காஸ்மீரா பர்தேசி நடித்துள்ளார். பிரேமம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவை கவனிக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்