HomeNewsKollywoodபிகினிங் படம் மூலம் மீண்டும் உயிர்த்தெழுந்த திருப்பதி பிரதர்ஸ்

பிகினிங் படம் மூலம் மீண்டும் உயிர்த்தெழுந்த திருப்பதி பிரதர்ஸ்

இயக்குனர் லிங்குசாமி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். முன்னணி நடிகர்கள் பலரும் அவரது இயக்கத்தில் நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் நல்ல படங்களை தியேட்டவர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் திரைப்பட வினியோகத்தில் இறங்கி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக படங்களை வினியோகம் செய்யத் தொடங்கினார்.

இன்னொரு பக்கம் புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் விதமாக படங்களை தயாரிக்கவும் துவங்கினார். ஆரம்பத்தில் சில நல்ல படங்கள் வெற்றியைக் கொடுத்தன. அதன்பிறகு வெளியான ஒரு சில படங்கள், குறிப்பாக கமல் நடித்த உத்தமவில்லன் படம் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. இதனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வேண்டும் தயாரிப்பில் இறங்க முடியாத அளவுக்கு கடுமையான சூழல் ஏற்பட்டது.

அதையடுத்து கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது பிகினிங் என்கிற படத்தை வெளியிடுவதன் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து உள்ளது. ஸ்பிளிட் ஸ்கிரீனிங் என்கிற முறை மூலம் அதாவது ஒரே திரையில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விதமான கதைக்கான காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும் முறையில் உருவாகியுள்ள பிகினிங் என்கிற திரைப்படத்தை தனது திருப்பதி பிரதர்ஸ் மூலமாக வெளியிடுகிறார் லிங்குசாமி.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது இந்த படம் விருதுக்காகவோ, ஒடிடி தளத்திற்காகவோ எடுக்கப்பட்ட படம் இல்லை. தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம். தியேட்டரில் வெளியாகும்போது நிச்சயம் வரவேற்பை பெறும். இந்த படத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து இதேபோன்று நல்ல படங்களை மீண்டும் வெளியிட துவங்குகிறோம்.

அதுமட்டுமல்ல உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக கமல் ஒரு படம் தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார் என ஒரு புதிய தகவலையும் கூறினார் இயக்குனர் லிங்குசாமி.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments