த்ரிஷா, நயன்தாரா இவர்களுக்கு அடுத்த இடத்தில் மிகப்பெரிய முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா தான் என்பதில் சந்தேகமே இல்லை. தொடர்ந்து வெற்றிப் படங்களிலும், பல படங்களில் இடைவிடாமல் நடித்து வந்த சமந்தா கடந்த சில மாதங்களாகவே மயோசிடீஸ் எனப்படும் தசை நார் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்தார் சமந்தா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த யசோதா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து அவர் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் பிப்-17ல் ரிலீஸாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த திரும்பி விட்டார் சமந்தா. அந்த வகையில் தற்போது சாகுந்தலம் படத்தின் தனக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இந்த சாகுந்தலம் படத்தை மகேஷ்பாபு நடித்த ஒக்கடு, அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய குணசேகர் இயக்கியுள்ளார் வரலாற்று பின்னணியில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இதன் ட்ரெய்லர் ஜன-9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.