கடந்த 30 வருடங்களாக இசைப்புயல் என்கிற பட்டத்திற்கு ஏற்றபடி திரையுலகில் ஒரு புயல் ஆகவே பல சாதனைகளால் சுழன்றடித்து வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகள் அனைத்திற்கும் சொந்தக்காரராக மாறிய ஏ ஆர் ரஹ்மான் தன்னை போன்று திரையுலகில் இசையில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் தற்போது ஒரு புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒன்றை தனது பிறந்த நாளன்று உருவாக்கி கொடுத்துள்ளார்.

இந்த சர்வதேச பிளாட்பார்ம் இற்கு தமிழில் கற்றார் என பெயர் வைத்துள்ளார் இந்த டிஜிட்டல் தளம் இசைக்கலைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் இதில் கலைஞர்கள் நேரடியாக பங்கேற்று தங்களது படைப்புகளை பட்டியலிட்டு பணமாக்கலாம். இந்த தளம் புதிய திறமையான கலைஞர்களுக்கு பாலமாக அமையும்.. எதிர்காலத்துக்கான தளமாக இது இருக்கும் என்று கூறியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

மேலும் புதிய ஐடியாக்களை கொண்டிருக்கும் கலைஞர்கள் அதனை உலகிற்கு அறிமுகப்படுத்த இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ள ஏ ஆர் ரஹ்மான் ஐடியாக்கள் மற்றும் கிரியேட்டிவிட்டி அதுதான் உலகம் மாறுகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது பிரத்தியேக படைப்புகளில் சிலவற்றை இந்த கற்றார் தளம் மூலம் வெளியிட இருக்கிறார் ஆர் ரஹ்மான் இதைத்தொடர்ந்து பல சர்வதேச தரத்திலான படைப்புகளும் இந்த தளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.