நடிகர் விஜய்சேதுபதியை பொருத்தவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பே தென்னிந்திய அளவில் பிரபலமாக தேடப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார். தற்போது சமீபகாலமாக பாலிவுட்டிலும் அவருக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்தியில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் வெப்சீரிஸ்களை இயக்கி புகழ் பெற்ற இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்சி என்கிற வெப்சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
இந்தப் சீரிஸில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர் , மற்றும் இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிற மோதலுடன் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது