Home News Kollywood ஜனவரி 11ஆம் தேதியே வெளியாகும் வாரிசு-துணிவு

ஜனவரி 11ஆம் தேதியே வெளியாகும் வாரிசு-துணிவு

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அஜித் நடித்தது முழு திரைப்படமும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீசாக இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான துணிவு துணிவு பட ட்ரெய்லர், நேற்று வெளியான வாரிசு ட்ரெய்லர்  ஆகியவை அஜித், விஜய் ரசிகர்களை இன்னும் அதிக அளவில் உற்சாகப்படுத்தி உள்ளன.

இந்தநிலையில் இரண்டு படங்களுமே ஜன-12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் ஜன-11ஆம் தேதி வெளியாவதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் ஏற்கனவே வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வாரிசு படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒரு படம் முன்னதாகவும் இன்னொரு படம் அடுத்த நாளும் வெளியாகும்போது முதல்நாள் தனியாக வெளியாகும் படத்திற்கான முதல் நாள் வசூல் என்பது மிகப் பெரிய அளவில் எங்கேயோ போய் நிற்கும். அடுத்தநாள் இன்னொரு படம் வெளியாகும்போது வசூல் சரிபாதியாக பிரிந்து விடும்.

இதுகுறித்து விஜய் ரசிகர்கள் கவலைப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் யார் பலசாலி என பார்த்துவிடலாம் என ஒரு தரப்பு ரசிகர்களும் இரண்டு படங்களுமே நன்றாக ஓட வேண்டும் என இன்னொரு தரப்பு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.