சிம்பு நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் பத்து தல. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஒபிலி கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாவதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை பேசி முடித்தார் கௌதம் கார்த்திக். இந்த நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் தன்னுடைய டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கருக்கு இந்த படம் கமர்சியல் வெற்றியாக அமைந்தால் இன்னும் அதிக உயரத்திற்கு செல்வார் என்பது நிச்சயம்.