விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர், harish கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது தனது ஆஸ்தான நாயகனான விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதேசமயம் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வரும் மைக்கேல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், திவ்யான்ஷா கௌசிக் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய வேடங்களில் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்னொரு பக்கம் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.