தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஏதோ ஒரு காட்சியில் பெண் வேடத்தில் நடித்து உள்ளார்கள் என்பதை பார்த்துள்ளோம். கதைக்கு ஏதோ ஒரு விதத்தில் அந்த பெண் கதாபாத்திரம் தேவையாக இருக்கும். அதேசமயம் ஒரு நடிகர் ஒரே படத்தில் இரண்டு வரலாற்று மாவீரர்களின் கதாபாத்திரத்தில் ஒன்றில் ஆணாகவும் ஒன்றில் பெண்ணாகவும் நடிக்கிறார் என்றால் இதுதான் முதன் முறையாக இருக்கும். அப்படி நடிப்பவர் நடிகர் சேத்தன் சீனு.
அவர் நடிக்க இருப்பது வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் கதாபாத்திரங்களில் தான். இது குறித்த போஸ்டர்கள் தற்போது வெளியாகி மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கருங்காலி என்கிற படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்த சேத்தன் சீனு அதன்பிறகு தெலுங்கில் சென்று சில படங்களில் நடித்து கவனிக்கத்த நடிகராக உயர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது பான் இண்டியா படமாக தயாராகிவரும் ஆக்டர் என்கிற படத்தில் தான் இத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சேத்தன் சீனு. இந்த படத்திற்கு தமிழில் நடிகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தமிழில் ஜென்டில்மேன்-2வில் கதாநாயகனாக நடிக்கிறார் சேத்தன் சீனு.