தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மாரி-2 என்கிற பெயரில் அதே பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருந்தார்.

தமிழில் இவர் நேரடியாக நடித்த முதல் படம் இதுதான். அதன்பிறகு இவர் தமிழில் நடிக்கவிட்டாலும் கூட மலையாளத்தில் இவர் நடித்த மாயநதி, மின்னல் முரளி ஆகிய படங்கள் இவரை தமிழ் ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்தன.

இந்த நிலையில் தற்போது அதிர்ஷிய ஜலகங்கள் என்கிற ஒரு படத்தில் நடித்துள்ளார் டொவினோ தாமஸ். இந்த படத்தை விருது படங்களாக எடுத்து குவிக்கும் டாக்டர் பிஜு என்கிற மலையாள இயக்குனர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் சில சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்துள்ளன.

ஆம்.. இந்த படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு டொவினோ தாமஸின் உருவம் ரொம்பவே மாறியுள்ளது. அதேசமயம் இந்த கதாபாத்திரத்திற்கு இப்படி உருவத்தோற்றம் தேவை என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் டொவினோ தாமஸ்.