அருண்விஜய் நடிப்பில் இந்த வருடம் யானை, சினம், ஓ மை டாக் ஆகிய படங்களும் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப்சீரிஸும் வெளியாகி அனைத்துமே ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் பார்டர்.

டைட்டிலுக்கு ஏற்றபடி இந்தப்படத்தில் ராணுவ பின்னணியில் கதைக்களம், அதில் அருண் விஜய் ஒரு உளவாளி என ஒரு பக்கா ஸ்பை திரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது.

அருண்விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ஈரம் அறிவழகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில் தற்போது வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியிலாவது நிச்சயம் இந்த படம் வெளியாகும் என நம்புவோம்.