HomeNewsKollywoodஹரிஷ் உத்தமன் கதாநாயகனாக நடிக்கும் நூடுல்ஸ் மோஷன் போஸ்டர் வெளியானது

ஹரிஷ் உத்தமன் கதாநாயகனாக நடிக்கும் நூடுல்ஸ் மோஷன் போஸ்டர் வெளியானது

பாண்டிய நாடு, தொடரி உள்ளிட்ட படங்களின் மூலம் அதிரடி வில்லனாக ரசிகர்களின் மனதில் பதிந்தவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவரது வில்லத்தனத்திற்கு வரவேற்பு உண்டு. அதே சமயம் தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியின் நண்பர்களில் ஒருவராக பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹரிஷ் உத்தமன்.

இந்த நிலையில் தற்போது நூடுல்ஸ் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் ஹரிஷ் உத்தமன். இந்த படத்தில் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். இந்த படத்தை மதன் தக்ஷிணாமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார்.

ரெளடிபேபி புகழ் S.J. ஆழியா, அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர் இந்த நிலையில் தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷூடன் ராபர்ட் சற்குணம் இணைந்து பின்னணி இசை அமைத்துள்ளார். ரமேஷ் கிருஷ்ணன் MK படத்தின் பாடல்களை கம்போஸ் செய்துள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments