விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வீரமே வகை சூடும் படத்தை ஒரு அறிமுக இயக்குனர் இயக்கியது போல இந்த லத்தி படத்தையும் அறிமுக இயக்குனரான வினோத் குமார் என்பவர் இயக்கியுள்ளார். சுனைனா இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிரடி உயர் அதிகாரியாக நடிக்காமல் சாதாரண ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இருந்தாலும் முழுக்க முழுக்க ஆக்சனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்த படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு தமிழகம் மற்றும் ஆந்திராவில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் விஷால். அந்தவகையில் திருப்பதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார் விஷால். விஷாலிடம் அரசியலுக்கு வருவீர்களா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த விஷால், “எம்எல்ஏக்கள் வாங்கும் சம்பளத்தை விட, அவர்களுக்கு கிடைக்கும் எனக்கு அதிகமாகவே கிடைத்து வருகிறது. நான் அவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறேன். அதனால் நேரடி அரசியலில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சமூக சேவை செய்யும் எல்லோருமே அரசியல்வாதிகள் தான்” என்று கூறியுள்ளார்.