V4UMEDIA
HomeNewsKollywoodநயன்தாரா படத்தின் கேன்டீன் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறார்கள் ?

நயன்தாரா படத்தின் கேன்டீன் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறார்கள் ?

நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கனெக்ட். ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை ஏற்கனவே அவரை வைத்து மாயா என்கிற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த படம் ஓடிடி தளத்தில் தான் வெளியாகும் என சொல்லப்பட்டது. காரணம் இந்த படம் கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென முடிவு மாற்றப்பட்டு திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தப்படம் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ஓடக்கூடிய படமாக வெளியாகும் என்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலும் தியேட்டர்கள் டிக்கெட் கட்டணங்களை விட இடைவேளையின்போது கேண்டீனில் வியாபாரத்தில் கிடைக்கும் வசூளை மிகப்பெரிய அளவில் நம்பி இருக்கின்றனர்.

அதனால் இடைவேளை இல்லாமல் கனெக்ட் படத்தை ஓட்டினால் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் நட்டம் ஏற்படும் என தயாரிப்பாளர்களிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. படம் வெளியாவதற்குள் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments