நடிகர் அஜித்தை பொருத்தவரை சினிமாவிற்கு அடுத்ததாக பைக் பயணங்களை ரொம்பவே நேசிப்பவர். தனது நண்பர்களுடன் பைக்கில் ஜாலியாக பயணிக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் ஆங்காங்கே அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியாவது உண்டு.

சில மாதங்களுக்கு முன் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் கூட நடிகை மஞ்சு வாரியர், அஜித் உள்ளிட்ட குழுவினர் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
அது மட்டுமல்ல அஜித் உலகில் உள்ள பல இடங்களுக்கு ஒரு சுற்று பயண திட்டம் வைத்திருக்கிறார் என்று ஒரு வரைபடம் கூட சில மாதங்களுக்கு முன் வெளியானது.

தற்போது துணிவு படத்தை முடித்துவிட்டு அஜித் அந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதிலும் உள்ள பகுதிகளுக்கு குறிப்பாக லடாக், காஷ்மீர், ஸ்ரீநக,ர் ஜம்மு போன்ற பகுதிகளில் சுற்றி வந்து தனது முதல் கட்ட சுற்று பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

அடுத்ததாக அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு மீண்டும் தனது சுற்றுப்பயணம் சீசன் 2 வை அவர் துவங்குவார் என தெரிகிறது.