எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சரவணன். எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த இவர் த்ரிஷாவை நாயகியாக வைத்து ராங்கி என்கிற படத்தை இயக்கினார்.

ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அடுத்ததாக அவர் நாடு என்கிற படத்தையும் இயக்கி முடித்து ரிலீசுக்கும் தயார் செய்து விட்டார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கின்றது.
இந்த நிலையில் இந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்பு தற்போது ராங்கி படத்தை ரிலீஸ் செய்வதற்கு அந்த பட தயாரிப்பு நிறுவனம் வேலைகளை துவங்கி விட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 30-ம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஓடிடி தளத்தில் தான் இந்தப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது நேரடியாகவே ராங்கி படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள்.

திரிஷாவுக்கு தற்போது பொன்னியின் செல்வன் மூலம் கிடைத்துள்ள மவுசு தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதே தேதியில் தான் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


























