தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு கொண்டே இருந்தார். குறிப்பாக இந்த வருடம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இன்னொரு பக்கம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்து வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த இரண்டு படங்கள் தொடர்பான விஷயங்களும், அதுமட்டுமின்றி விஜய் தனது ரசிகர்களை சந்தித்தது குறித்த தகவல்களும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.


இந்த நிலையில்தான் வருடந்தோறும் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டவர்கள் குறித்த பட்டியலை கூகுள், ஐஎம்டிபி போன்ற சில இணையதளங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கூகுள் தேடு பொருள் இந்த வருடத்தில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .


அதில் நடிகர் விஜய்க்கு 15 வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் ஐந்து தமிழ் நடிகர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அதில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.


அடுத்ததாக சூர்யா 45 ஆவது இடத்திலும் தனுஷ் 46-வது இடத்திலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 68வது இடத்திலும் அஜித் எழுபத்தி 78வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.