V4UMEDIA
HomeNewsKollywoodபெண்களின் உளவியலை பற்றி நவீன வடிவில் பேசும் ‘அவள் அப்படித்தான் 2’

பெண்களின் உளவியலை பற்றி நவீன வடிவில் பேசும் ‘அவள் அப்படித்தான் 2’

கடந்த நாற்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் இயக்குனர் ருத்ரைய்யா இயக்கத்தில் வெளியான படம் அவள் அப்படித்தான். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். அதேசமயம் இந்தப்படம் கதாநாயகியாக நடித்த ஸ்ரீபிரியாவை மையப்படுத்தி உருவாகி இருந்தது.

இந்தப்படம் வெளியான சமயத்தில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் விமர்சகர்களால் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று இப்போதுவரை இயக்குனர் ருத்ரய்யாவின் மிகச்சிறந்த படைப்பாக இந்தப்படம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நவீன வடிவமாக அவள் அப்படித்தான் 2 என்கிற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது.

இந்தப் படத்தை ரா .மு. சிதம்பரம் இயக்கியுள்ளார்.திருநெல்வேலியில் பிறந்த இவர், இயக்குநர் ஆதவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.குறும்படங்கள் , விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் இயக்கியவர். ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ திரைப்படத்தின் கதாசிரியர்.

இந்த ‘அவள் அப்படித்தான் 2 ‘ படத்தில் அந்த ‘அவளாக ‘ சுயமரியாதை கொண்ட ஒரு பெண்ணாக அதாவது கதை நாயகியாக நடித்திருப்பவர் சினேகா பார்த்திபராஜா. திருப்பத்தூரைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர்.

இந்தியாவில் முதன்முதலாக மதம் ,ஜாதியற்றவர் என்று தனக்கு ஜாதிமறுப்புச் சான்றிதழ் வாங்கியவர். இதற்காகப் பல ஆண்டுகள் போராடி அதைப் பெற்றவர்.

இவரது கணவர் பார்த்திபராஜா நாடகக் குழுவைத்துள்ளார் .கணவர் குழுவில் இணைந்து நடித்த அனுபவம் சினேகாவுக்கு உண்டு.

படத்தின் நாயகனாக நடித்துள்ளவர் அபுதாகிர்.இவர்கள் தவிர சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன் ,தனபால், தொல்காப்பியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்

Most Popular

Recent Comments