நடிகர் அஜித்தை பொறுத்தவரை ஒரு இயக்குனரின் செயல்பாடுகள் பிடித்துவிட்டால் அவருடன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவார். இதற்கு முன் சரண், விஷ்ணுவர்தான் ஆகியோர் அந்த பட்டியலில் இருந்தாலும் கடந்த பத்து வருடங்களில் இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கும் அளவுக்கு நெருக்கமானார்.
அதை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் தற்போது அவரை வைத்து மூன்றாவது முறையாக துணிவு என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியாக உள்ளது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட மூவிஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இந்தநிலையில் இந்தப்படத்தில் சமூகத்திற்கு எந்தவிதமான கருத்தை சொல்ல முயன்றுள்ளீர்கள் என இயக்குனர் வினோத்திடம் கேட்கப்பட்டபோது, இது சமூக விழிப்புணர்வுக்கான படம் அல்ல.. பக்கா கமர்ஷியல் படம்.. அதேசமயம் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் விதமான படமாக இருக்ரும். இதற்கு முன்பு பார்த்த அஜித்தை விட, இந்தப்படத்தில் வசனம், உடல்மொழி என புதிய அஜித்தை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் இயக்குனர் வினோத்.