V4UMEDIA
HomeNewsKollywoodலத்தி படத்தின் சென்சார்-ரன்னிங் டைம் வெளியானது

லத்தி படத்தின் சென்சார்-ரன்னிங் டைம் வெளியானது

வீரமே வாகை சூடும் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்த படமாக வெளியாக இருக்கிறது லத்தி. இந்தப்படத்தில் விஷால் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ள இந்தபடம் வரும் டிச-22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது சென்சாருக்கு அனுப்பப்பட்ட இந்தப்படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் 2 மணி 30 நிமிடம் ஓடும் விதமாக இந்தப்படம் தயாராகி உள்ளது.

மேலும் விஷால் நடிப்பில் முதன்முதலாக பான் இண்டியா படமாக இது உருவாகியுள்ளதால் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திக்கான டப்பிங்கை விஷாலே பேசியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக சற்றே சரிந்து கிடக்கும் விஷாலின் மார்க்கெட்டை இந்தபடம் நிமிர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Most Popular

Recent Comments