இன்றைய செய்திகளில் தமிழகத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதுதான். இதனால் பல இளைஞர்கள் இந்த விளையாட்டில் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

அரசாங்கம் இதை தடை செய்வது குறித்து தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதேசமயம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய சில திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தின் பாதிப்பு மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழித்திரு என்கிற திரைப்படமே உருவாகி உள்ளது.

இதில் கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ , பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி , வினோதினி, வில்லு முரளி ,ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக்,மற்றும் பலர் நடித்துள்ளனர்
தொழில்நுட்பப் புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சௌகரியத்தையும் வசதியையும் நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடக்கின்றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நொடிப் பொழுதில் தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம்.

இப்படி ஆன்லைன் மூலம் பண இழப்பைச் சந்தித்தவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள் .அதனால்தான் அப்படிப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கத் தமிழகஅரசு முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘விழித்தெழு.
திரைப்பட இயக்குநர் தமிழ்செல்வன் தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லும்போதே தயாரிப்பாளர் “மிகவும் அருமையான கதை இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான கதை என்று உடனே படப்பிடிப்பு நடத்தி படத்தை எடுத்து உடனே ரிலீஸ் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார். சொன்னபடியே மும்முரமாக களத்தில் இறங்கியும் உள்ளார்.