HomeNewsKollywood300 திரையரங்குகளில் வெளியாகும் வரலாறு முக்கியம்

300 திரையரங்குகளில் வெளியாகும் வரலாறு முக்கியம்

கடந்த முப்பது வருடங்களில் கிட்டத்தட்ட 100 படங்களை நெருங்கும் விதமாக தரமான படங்களை தயாரித்து வந்த நிறுவனம் சார்பில் சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிலையில் தற்போது ஜீவா நடிப்பில் வரலாறு முக்கியம் என்கிற படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் சக்திராஜன் இயக்கியுள்ளார். திறமையும் அழகும் ஒன்றிணைந்த நடிகைகளான காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரக்யா நாக்ரா ஆகியோர் படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

விடிவி கணேஷ் மற்றும் மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நகைச்சுவைக்கு பொறுப்பெடுத்துக் கொண்டு உள்ளனர் இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்து உள்ளனர்.

டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு 300 ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன ஜிமிக்கி கம்மல் பாடல் இசை அமைத்த ரகுமான் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments