தளபதி விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை ரிலீசாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ள நிலையில் அவருக்கு நான்கு வாரங்களுக்கு முன்பே இங்கிலாந்தில் இந்த படத்திற்கான முன்பதிவு துவங்க இருக்கிறது.
இதுவரை இங்கிலாந்தில் எந்தவொரு தமிழ் படத்திற்கும் இப்படி நான்கு வாரங்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கப்பட்டது இல்லை.. அந்த வகையில் இப்படி ஒரு புதிய சாதனையை வாரிசு திரைப்படம் தனக்கு சொந்தமாக்கி உள்ளது.