ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். அதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறா.ர் இதில் தனுஷுக்கு அடுத்ததாக முக்கியமான வேடத்தில் பிரபல கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.

இந்த படத்தில் அவர் நடிப்பது குறித்து செய்திகள் மட்டும் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக கன்னட சினிமாவில் நடித்து வந்தாலும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த சிவராஜ்குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி இரண்டு பெரும் ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் இணைந்து தனது தமிழ் திரையுலக பிரவேசத்தை நிகழ்த்தி உள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம்.