சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், டான் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற, அதே அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட அவர் தெலுங்கில் முதன்முதலாக நடித்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது.
இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தற்போது மாவீரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக அவர் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், ஏற்கனவே அயலான் என்கிற படத்தில் நடித்து வந்தார்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இந்த படம் துவங்கி மூன்று வருடங்கள் ஆகி விட்ட நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு இடைவெளி விட்டுவிட்டு நடந்து வந்தது..
இந்த நிலையில் கடந்த மாதமே படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் இந்த படத்தில் எடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காட்சி ஒன்று பொருளாதார பிரச்சினை காரணமாக எடுக்கப்படாமல் பாக்கி இருந்ததாம்.
தற்போது அந்த பிரச்சினையை சிவகார்த்திகேயன் சரிசெய்து விட்டதால் அந்த காட்சியையும் சமீபத்தில் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்று படமாக்கி முடித்து விட்டார்கள் என்றும் தகவல் கசிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக இது வெளியாகும் என உறுதியாக தெரிகிறது.