இயக்குனர் வெங்கட்பிரபு முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்து தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி ஆகியோர் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் இந்த படம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் நாளை (நவ-23) நாகசைதன்யாவின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் இந்தப் ப்ரீ லுக் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த ப்ரீ லுக்கில் நாகசைதன்யா தீவிரமான காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவரது வேகத்தையும் தீவிரத்தையும் மட்டுப்படுத்தும் விதமாக சக போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் ஃபோர்ஸூடன் இந்த ப்ரீ லுக்கில் உள்ளனர்.
நாக சைதன்யா இதற்கு முன்பு அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு ரீமேக்கின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் போலீஸ் அதிகாரியாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் வெங்கட் பிரபு தற்போது தான் இயக்கி வரும் இந்தப் படத்தில் நாகசைதன்யா போலீஸ் அதிகாரியாகவே முழு நீள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.