HomeNewsKollywoodவிமரிசையாக நடைபெற்ற கட்டா குஸ்தி இசை வெளியீட்டு விழா

விமரிசையாக நடைபெற்ற கட்டா குஸ்தி இசை வெளியீட்டு விழா

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். கதை தனக்கு பிடித்து இருந்தால் மற்ற தயாரிப்பாளர்கள் அதை தயாரிக்க தயங்கினாலும் தனது சொந்த தயாரிப்பிலேயே அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் தயங்காதவர்.

அப்படி அவர் தற்போது தயாரித்து நடித்துள்ள படம் கட்டா குஸ்தி. இந்த படத்தை அவருடன் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் இணைந்து தயாரித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கில் மட்டி குஸ்தி என்கிற பெயரில் ஒரே நேரத்தில் இந்தப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

ஏற்கனவே விஷ்ணு விஷாலை வைத்து சிலுக்குவார்பட்டி சிங்கம் என்கிற படத்தை இயக்கிய செல்லா அய்யாவு தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குஸ்தி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது.

விஷ்ணு விஷால் ஒரு நடிகராக அறிமுகமானதே கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவான வெண்ணிலா கபடி குழு என்கிற வெற்றிப் படத்தின் மூலம்தான். அதைத் தொடர்ந்து கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான ஜீவா என்கிற படத்திலும் நடித்தார். இப்போது குஸ்தி விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் லால் சலாம் படத்திலும் இதே போன்று கிரிக்கெட் வீரராக தான் நடிக்கிறார் விஷ்ணு விஷால்

அந்தவகையில் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் விளையாட்டு வீரராக நடித்தது விஷ்ணு விஷாலாகத்தான் இருக்கும். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவில் பிரபலமான பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறிப்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் ரவிதேஜாவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆந்திராவிலிருந்து வந்திருந்தார்.

இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதனால் இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் விஷ்ணு விஷாலை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுசீந்திரனும், அவரை அடுத்ததாக இயக்க இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷாலை வைத்து ராட்சசன் என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் டில்லி பாபு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதுமட்டுமல்ல பிரபல முன்னணி தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது, அடுத்ததாக தங்களது நிறுவனத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளோம் என்றும் அந்த படத்தை ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார் என்றும் மேடையிலேயே அறிவித்தார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments