இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். அந்த நட்பின் அடிப்படையில் இதற்கு முன்னதாக வசந்தபாலன் இயக்கிய ஜெயில் என்கிற படத்தில் கதாநாயகனாகவும் ஜி.வி பிரகாஷ் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அதை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கி வரும் அநீதி என்கிற படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார். கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லத்தனமான நடிப்பை காட்டி வமிரட்டிய அர்ஜுன் தாஸ் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு உருவாக்கப்பட்ட திகட்ட திகட்ட காதலிப்போம் என்கிற பாடலை ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார்.