தெலுங்கு இயக்குனர் தமிழ் ஹீரோவை வைத்து படம் பண்ணினால் சரிப்பட்டு வருமா, இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லையே என்பது போன்று ஒரு கலவையான பேச்சு இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தையும் சிலர் இதுபோன்று குறைவாக மதிப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாரிசு படத்தை இயக்கும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி ஏற்கனவே கார்த்தி, நாகார்ஜுனா இருவரையும் வைத்து தோழா என்கிற உணர்வுபூர்வமான சூப்பர்ஹிட் படத்தை கொடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார்.
ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் பல்ஸ் அறிந்தவர் என்பதால் இந்த வாரிசு படம் அவரது திரையுலக பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக இருக்கப்போகிறது என்று படக்குழுவினர் கூறிவருகின்றனர்.
இந்தநிலையில் தளபதி விஜய்யுடன் முதன் முறையாக இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து வம்சி பைடிப்பள்ளி ஒரு பேட்டியில் கூறும்போது, “விஜய் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதற்குப்பின்னால் நேர்மை, ஒழுக்கம் வேலை மீதான அர்ப்பணிப்பு உணர்வு இந்த மூன்றும் அவரிடத்தில் உள்ளது.
இந்த மூன்றும் ஒருவரிடத்தில் இருந்து விட்டால் அவரை யாராலும் அடிச்சுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர்தான் விஜய். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர்” என்று கூறியுள்ளார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி..